குயினே டப்பில் அமர்ந்து கொண்டு இடுப்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். கால்கள் டப்பிற்கு வெளியே இருக்கும். வேறு ஒரு அகலமான பாத்திரத்தில் கணுக்கால்கள் மூழ்கும் அளவிற்கு வெந்நீர் ஊற்றிக் கொள்ளவும். கால் சூடு தாங்கும் வரை இருந்தால் போதும். தலைக்கு தண்ணீரில் நனைத்துப் பிழிந்த துவாலையை, தலைப்பாகையை போல் சுற்றிக் கொள்ளவும். வெந்நீர் பாதக்குளியலைப் போன்று இம்முறையில் அதிகளவு வியர்வை வருவதில்லை. எனவே முப்பது நிமிடங்கள் முடிந்த பின்னர் தண்ணீரில் தலைக்கு குளிக்கவும்.
குறிப்பு:
குயினே டப் என்பது ஜெர்மனியில் வாழ்ந்த இயற்கை மருத்துவர் லூயி குயினே என்பவரால் இடுப்புக் குளியல் சிகிச்சைக்காகப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தொட்டியாகும். இந்த தொட்டியை வாங்க விரும்புபவர்கள், தங்கள் அருகாமையிலிருக்கும் இயற்கை மருத்துவர் / இயற்கை மருத்துவமனை / இயற்கை அங்காடியை அணுகவும்.
No comments :
Post a Comment