இடம்:காரம், வலம்:இனிப்பு |
மாவு அரைக்க:
- நாட்டு சோளம் – 1 கப் (200 கிராம்)
- தோல் உளுந்து – 3 தேக்கரண்டி
- வெந்தயம் – 1 தேக்கரண்டி
- இந்துப்பு – 1 சிட்டிகை
- தண்ணீர் – 3/4 முதல் 1 குவளை வரை
இனிப்பு பணியாரத்திற்கு மாவுடன் கலக்க:
- வெல்லம் – 3/4 கப்
- தண்ணீர் – 3/4 கப்
- ஏலக்காய் – 4 துண்டுகள்
மாவு அரைக்கும் முறை:
- சோளத்தை 5 மணிநேரம் வரை ஊற வைக்கவும்.
- தோல் உளுந்து மற்றும் வெந்தயம், இவை இரண்டையும் 5 மணிநேரம் வரை ஊற வைக்கவும்.
- பின் ஒன்றிரண்டு முறை நீரில் அலசி விட்டு, ஆட்டுக்கல்லில் (கிரைண்டர்) முதலில் உளுந்து, வெந்தயக் கலவையை அரைக்கவும். சிறிதளவு நீர் ஊற்றவும். அது நன்றாக பொங்கி வந்த பிறகு, மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
- பிறகு சோளத்தையும் அதேபோல் சிறிது நீர் ஊற்றி அரைக்கவும். இறுதியில் உளுந்து மாவையும் ஒருமுறை சோள மாவுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- இந்த மாவில் இந்துப்பை கலந்து 8 மணிநேரம் புளிக்க விடவும்.
இனிப்பு பணியாரம் செய்முறை;
- பணியாரம் ஊற்றுவதற்கு முன்னர், வெல்லப்பாகு சேர்க்க வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை தூளாக்கி போட்டு, அதில் 1/4 டம்ளர் நீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் பாத்திரத்தை வைத்து 3 நிமிடம் வரை கொதிக்க விடவும்.
- பிறகு அதனை வடிகட்டி பணியார மாவில் ஊற்றி, அதில் சிறிது ஏலக்காய் பொடி போட்டு நன்றாக கலக்கவும்.
- இறுதியில் பணியார அச்சு பாத்திரத்தில் மாவை சிறிது சிறிதாக ஊற்றி, இருபுறமும் நன்றாக வெந்த பிறகு, பணியாரத்தை எடுத்து வேறு தட்டில் வைக்கவும்.
- சூடு சற்று குறைந்த பின்னர் சாப்பிடவும்.
காரப்பணியாரம் செய்முறை:
- பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது
- கடுகு, உளுத்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி
- கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
- மிளகு - 1/2 தேக்கரண்டி
- நல்லெண்ணை – 2 தேக்கரண்டி
- கறிவேப்பிலை – விருப்பமான அளவு
செய்முறை:
- வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணை ஊற்றவும்.
- எண்ணை காய்ந்ததும் அதில் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு போடவும். பின் கடலைப்பருப்பு போட்டு வதக்கி, பொன்னிறமாக ஆன பிறகு வெங்காயம் போட்டு வதக்கவும். மிளகை பொடித்து போடவும்.
- இறுதியில் கறிவேப்பிலை போட்டு அடுப்பை அணைக்கவும்.
- இந்தக் கலவையை பணியார மாவில் போட்டு நன்றாக கலக்கி, பணியார அச்சில் ஊற்றி, வேக வைக்கவும்.
குறிப்ப:
- சோளத்திற்கு பதிலாக, வரகு, சாமை, பனிவரகு, திணை ஆகிய சிறு தானியங்களையும், மாப்பிள்ளை சம்பா அரிசியையும் பணியாரம் செய்ய பயன்படுத்தலாம்.
- பணியார மாவு அரைப்பதற்கு, உங்களுக்குத் தெரிந்த வழக்கமான முறையையும் பின்பற்றலாம். ஆனால் உளுந்தின் அளவை மட்டும் எப்பொழுதும் குறைத்துப் பயன்படுத்தவும்.
No comments :
Post a Comment