மாப்பிள்ளை சம்பா இடியாப்பம் |
- மாப்பிள்ளை சம்பா அரிசி மாவு – 1 குவளை / 200 கிராம்
- தண்ணீர் - 1 குவளை / 200 மில்லி
- இந்துப்பு - 1 சிட்டிகை
மாவு தயாரிக்கும் முறை:
- மாப்பிள்ளை சம்பா அரிசி 1கிலோ வாங்கி, கல் மற்றும் தூசு நீக்கி, நன்றாக வெயிலில் காய வைத்துக் கொள்ளவும். இல்லையெனில் வெறும் வாணலியில் 5 நிமிடம் வறுத்து, ஆற வைக்கவும்.
- பின்னர் மாவு மில்லில் கொடுத்து மிகவும் சன்னமாக அரைத்துக் கொள்ளவும்.
- இந்த மாவை ஆற வைத்து, சல்லடையில் சலித்து, காற்று புகாத ஒரு பாத்திரத்தில் சேமித்து வைக்கவும். இவ்வாறு செய்வதனால், மாவு எளிதில் கெட்டு விடாமல் அதிக நாட்கள் நன்றாக இருக்கும்.
- இந்த மாவை இடியாப்பம், புட்டு அல்லது கொழுக்கட்டை செய்ய பயன்படுத்தலாம்.
- இடியாப்ப மாவை ஒரு ஆழமான பாத்திரத்தில் போட்டு, அதில் இந்துப்பை கலக்கவும்.
- மற்றொரு பாத்திரத்தில் தண்ணீரை நன்றாக கொதிவரும் வரை காய்ச்சி, அடுப்பை அணைத்து விடவும்.
- உடனடியாக அந்த நீரை, மாவில் சிறிது சிறிதாக ஊற்றி, ஒரு கரண்டி வைத்து பிசைந்து கொள்ளவும். நீர் அதிக சூடாக இருப்பதால், இதை சற்று கவனமாக செய்யவும்.
- சூடு சற்று குறைந்ததும், சிறிதளவு மாவை எடுத்து, இடியாப்ப அச்சில் வைத்து, இட்லி ஊற்றும் தட்டில் வட்ட வட்டமாக (இட்லி வடிவத்தில்) பிழிந்து கொள்ளவும்.
- இட்லி பாத்திரத்தில் வைத்து 8 முதல் 10 நிமிடம் வரை வேகவிடவும்.
- இதனுடன் இனிப்பிற்கு, நாட்டு சர்க்கரை போட்டு, அதில் தேங்காய் துருவல், சில துளிகள் நல்லெண்ணை ஊற்றி, கலந்து சாப்பிடலாம்.
- காரம் தேவையெனில் எலுமிச்சை / தேங்காய் / காய்கறிகள் போட்டு சேவை செய்தும் உண்ணலாம்.
- இது வழக்கமாக இடியாப்பம் செய்வதைப் போன்ற எளிதான முறைதான். இருந்தாலும், மாப்பிள்ளை சம்பாவில் எப்படி இடியாப்பம் தயாரிப்பது என்ற கேள்வி, புதிதாக முயற்சி செய்பவர்களுக்குத் தோன்றலாம். அதன் காரணமாகவே, இந்த செய்முறை தரப்பட்டுள்ளது.
- மாப்பிள்ளை சம்பா அரிசிக்கு பதிலாக, வேறு எந்த பாரம்பரிய அரிசி ரகங்களையும் அல்லது சிறுதானிய வகைகளையும், இதேபோன்று மாவாக்கி உபயோகிக்கலாம்.
- இனிப்பு இடியாப்பத்திற்கு, தேங்காய் பால் எடுத்து, அதில் பனங்கற்கண்டு / நாட்டு சர்க்கரை / சுத்திகரிக்கப்படாத சர்க்கரை (Brown Sugar) மற்றும் ஏலக்காய் தூள் கலந்து உபயோகிக்கலாம்.
கவுணி அரிசி இடியாப்பம் |
No comments :
Post a Comment