தேவையான பொருட்கள்:
- திணை – 1 குவளை
- பாசிப்பருப்பு – 1/4 குவளை
- தண்ணீர் – 4 1/2 குவளை
- வெல்லம் – 1 குவளை
- ஏலக்காய் – 4 அல்லது 5 துண்டுகள்
- தேங்காய் துருவல் - 1/4 குவளை
- முந்திரி பருப்பு – 6 முதல் 8 துண்டுகள்
செய்முறை:
- சமைப்பதற்கு 30 நிமிடம் முன்னர், திணை மற்றும் பாசிப்பருப்பு, இந்த இரண்டையும் தனித்தனியாக ஊற வைத்துக் கொள்ளவும்.
- பிறகு ஒரு பாத்திரத்தில், 1 குவளை தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பாசிப்பருப்பை, ஒருமுறை கழுவி விட்டு, கொதிக்கும் நீரில் போடவும்.
- பாசிப்பருப்பு பாதி வெந்த பின்னர், திணை அரிசியை போட்டு, மீதமுள்ள 3 1/2 குவளை தண்ணீரையும் ஊற்றவும். பாத்திரம் லேசாக திறந்திருக்கும் படி, ஒரு மூடி வைத்து மூடவும். இடையிடையே சாதத்தை அடிபிடிக்காமல் கிளறி விடவும்.
- இதற்கிடையில் மண்டை வெல்லத்தை தூளாக்கி வைக்கவும். சுத்தமான வெல்லமாக இருந்தால், அதை அப்படியே பயன்படுத்தலாம். இல்லையெனில், தூளாக்கிய வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு 1/4 குவளை நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து 3 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பிறகு அதை வடிகட்டி வைத்துக் கொள்ளவும். முந்திரிப் பருப்பை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து, எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- திணை அரிசியும், பாசிப்பருப்பும் நன்றாக வெந்து, குழைவான பதத்தை அடைந்ததும், அதில் பொடித்து வைத்துள்ள சர்க்கரை அல்லது வெல்லக் கரைசலை சேர்த்து நன்றாக கிளறவும். ஒரு ஐந்து நிமிடம் வரை அடுப்பில் வைத்திருந்து பின்னர் அடுப்பை அணைத்து விடவும். அதில் ஏலக்காய் தூள் மற்றும் முந்திரிப் பருப்பை சேர்த்து கிளறவும். விருப்பப்பட்டால், பொங்கல் சூடு சற்று குறைந்ததும், தேங்காய் துருவல் சேர்த்து கிளறி சாப்பிடவும்.
குறிப்பு:
- இனிப்பு பொங்கல் செய்வதற்கு, மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும், திணை அரிசி மிகவும் பொருத்தமானது.
- திணை மற்றும் பாசிப்பருப்பு வகைகள் அதிக அளவு நீரை ஈர்க்கும். எனவே அரிசி வேகும் பொழுது, மிகவும் கட்டியாக மாறினால், சிறிதளவு சூடான நீரை சேர்த்து வேக வைக்கவும்.
- பொங்கலை சாத்வீக முறைப்படி தயாரித்திருப்பதால், நெய் சேர்க்கவில்லை.
No comments :
Post a Comment