தேவையான பொருட்கள்:
- வரகு அரிசி – 1 குவளை (100 கிராம்)
- தண்ணீர் – 2 1/2 குவளை
- நல்லெண்ணை – 1 தேக்கரண்டி
- கடுகு – 1/2 தேக்கரண்டி
- நிலக்கடலை – 2 தேக்கரண்டி
- கறிவேப்பிலை – 1 ஈர்க்கு
- இந்துப்பு – சுவைக்கேற்ப
நிலக்கடலை பொடி தயாரிக்க:
- நிலக்கடலை – 1/4 குவளை
- உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் – 2
- எள்ளு – 1 தேக்கரண்டி
- தேங்காய் – 2 தேக்கரண்டி (நறுக்கியது அல்லது துருவியது)
- சமைப்பதற்கு முன்னர் வரகரிசியை 30 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும். குக்கரில் அரிசியை போட்டு நீர் ஊற்றி, அதில் சிறிது இந்துப்பு மற்றும் சில துளிகள் எண்ணை சேர்த்து வேக வைக்கவும். முதல் விசில் வந்த பிறகு, தீயை குறைத்து 8 நிமிடங்கள் கழித்து, அடுப்பை அணைக்கவும். குக்கர் ஆவி போன பிறகு, மூடியைத் திறந்து முள்கரண்டியால் சாதத்தை சற்று கிளறி விடவும். இந்த சாதத்தை மூடி, தனியே வைத்து விடவும்.
- வெறும் வாணலியில் 'நிலக்கடலை பொடி தயாரிக்க' என்ற தலைப்பில் கூறப்பட்டுள்ள பொருட்களை அதே வரிசையில் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வறுத்துக் கொள்ளவும். ஆறிய பிறகு அவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து, அந்தப் பொடியை தனியே வைத்துக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணை ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, பிறகு நிலக்கடலை போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும். அடுப்பை அணைத்து விடவும். இப்பொழுது வேக வைத்த சாதத்தையும், அரைத்து வைத்த நிலக்கடலை பொடியையும் வாணலியில் சேர்த்து அனைத்து பொருட்களையும் நன்றாக கலக்கவும். சுவைக்கு ஏற்ப இந்துப்பு சேர்க்கவும்.
- இந்த செய்முறையை வலைதளத்தில் கற்றேன். அதில் கூறப்பட்டுள்ள வெள்ளை அரிசிக்கு மாற்றாக, வரகு சிறுதானியத்தை பயன்படுத்தியுள்ளேன்.
- இதேபோல் சாமை மற்றும் குதிரைவாலி அரிசி வகைகளையும் பயன்படுத்தலாம்.
No comments :
Post a Comment