- கேழ்வரகு மாவு – 1 குவளை (200 கிராம்)
- நீர் – 3/4 குவளை
- வெங்காயம் – 1/4 குவளை
- தேங்காய் – 2 தேக்கரண்டி
- கறிவேப்பிலை – 2 தேக்கரண்டி
- இந்துப்பு – 2 சிட்டிகை (சுவைக்கேற்ப)
- நல்லெண்ணை – 2 தேக்கரண்டி
- ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை எடுத்துக் கொள்ளவும். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, தேங்காய் துண்டுகள் மற்றும் இந்துப்பு போடவும். தண்ணீரை ஊற்றி நன்றாக கலக்கவும். பாத்திரத்தை மூடி, குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் மாவை ஊற வைக்கவும்.
- தோசைக்கல்லை அடுப்பில் வைக்கவும். அது நன்கு சூடானதும், மாவை ஒரு கரண்டியில் எடுத்து கல்லில் ஊற்றவும். மாவு தடிமனாக இருக்கும் இடங்களில், விரல்களால் லேசாக பரப்பி விடவும். மூடி வைத்து வேகவிடவும்.
- இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் கழித்து, மூடியைத் திறந்து, ரொட்டியின் மேல் பகுதி மற்றும் ஓரங்களில் சில துளிகள் எண்ணையை ஊற்றவும். ரொட்டியைத் திருப்பிப் போட்டு மறுபுறமும் வேகவிடவும்.
- பிரவுன் நிறத்திட்டுக்கள் வந்த உடன், ரொட்டியைக் கல்லிலிருந்து எடுத்து, சூடாக பரிமாறவும்.
குறிப்பு:
- இந்த செய்முறை, பொதுவாக அனைவரின் வீட்டிலும் செய்யப்படும் மிக எளிதான ஒன்றுதான். இதில் முக்கியமாக, ரொட்டி மாவு அதிக தண்ணீர் இல்லாமலும், அதிக கட்டியாக இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- சாப்பிடும் பொழுது, தெரியாமல் கடித்து விடக்கூடாது என்பதனால், நான் மாவில் பச்சை மிளகாய் துண்டுகள் சேர்க்கவில்லை. உங்களுக்கு விருப்பம் இருந்தால் பச்சை மிளகாய் சேர்க்கவும்.
- ரொட்டிக்குத் தொட்டுக் கொள்ள, உங்களுக்கு விருப்பமான ஏதாவது ஒரு சட்னி, நாட்டு சர்க்கரை அல்லது காய்கறி குருமா வைத்துக் கொள்ளலாம்.
No comments :
Post a Comment