- கம்பு அம்மிணிக் கொழுக்கட்டை – 1 1/2 குவளைகள்
- வெங்காயத்தாள் (Spring onion) – 3 தண்டுகள்
- வெள்ளைப்பூண்டு (பொடியாக நறுக்கியது) – 1 தேக்கரண்டி
- பெரிய வெங்காயம் – 1/2 குவளை
- கேரட், முட்டைக்கோஸ், பீன்ஸ், குடைமிளகாய், காளான், பச்சைப்பட்டாணி (நீளவாக்கில் நறுக்கியது) – 1/4 குவளை ஒவ்வொன்றும்
- மிளகுத்தூள் – 1/2 தேக்கரண்டி
- இந்துப்பு – சுவைக்கேற்ப
- நல்லெண்ணை – 2 தேக்கரண்டி
செய்முறை:
- வெறும் வாணலியில், கம்பு மாவை சுமார் 6 முதல் 8 நிமிடங்கள் வரை வறுத்துக் கொள்ளவும். பின்னர் சோள அம்மிணிக் கொழுக்கட்டை செய்முறையில் குறிப்பிட்டுள்ளது போல் சிறு கொழுக்கட்டைகள் செய்து தயாராக வைத்துக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணை ஊற்றவும். அது சூடானதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தாளின் வெள்ளைத்தண்டு பகுதியையும் வெள்ளைப்பூண்டையும் போட்டு சில நிமிடங்கள் வதக்கவும். பிறகு நறுக்கிய பெரிய வெங்காயத்தைப் போட்டு சில நிமிடங்கள் வதக்கவும்.
- பின்னர் நறுக்கி வைத்துள்ள அனைத்து காய்கறிகளையும் ஒன்றாகப் போட்டு வதக்கவும். அடுப்பின் சூடு மிதமான அளவிற்கு சற்று அதிகமாக இருக்க வேண்டும். காய்கறிகள் அனைத்தும் முக்கால் பங்கு வெந்திருக்க வேண்டும். ஆனால் குழைந்து விடக்கூடாது. தேவைப்பட்டால் வாணலியை ஒரு சில நிமிடங்களுக்கு மூடி வைக்கவும். காய்கறி வெந்த பின்னர், மிளகுத்தூள் மற்றும் இந்துப்பு சேர்த்து கிளறவும்.
- இறுதியில் வேகவைத்துள்ள சிறு கொழுக்கட்டைகளையும் வெங்காயத்தாளின் பச்சைநிறப் பகுதியையும் சேர்த்து, அனைத்தையும் ஒன்றாகக் கிளறவும். உப்பு சரிபார்க்கவும். சூடாக பரிமாறவும்.
குறிப்பு:
- அனைத்து வகையான சிறுதானிய மாவுகளிலும் இந்தக் கொழுக்கட்டையை செய்யலாம்.
- கம்பு மாவில் கொழுக்கட்டை செய்யும் பொழுது மட்டும் தண்ணீர் குறைவாக (மாவின் அளவில் பாதி) உபயோகிக்கவும்.
No comments :
Post a Comment