பஞ்சாமிர்தம் |
- பூவன் அல்லது ரஸ்தாளி வாழைப்பழம் – 2 எண்ணிக்கை
- பேரிச்சம் பழம் – 8 எண்ணிக்கை
- தேன் – சுவைக்கேற்ப
- நாட்டுச்சர்க்கரை – சுவைக்கேற்ப
- ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை
- பனங்கற்கண்டு – 1 தேக்கரண்டி
செய்முறை:
- பேரிச்சம் பழத்தை கொட்டை நீக்கி விட்டு குறைந்தது 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் பூவன் அல்லது ரஸ்தாளி வாழைப்பழத்தை தோலை உரித்து விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிப் போடவும்.
- அதில் பேரிச்சம் பழத்தை தண்ணீர் இல்லாமல் எடுத்துப் போடவும். இவ்விரண்டுப் பொருட்களையும் கையால் அல்லது கரண்டியால் நன்கு கூழாகும் வரை மசிக்கவும்.
- பின்னர் அதில் சுவைக்கேற்ப நாட்டுச்சர்க்கரை மற்றும் தேன் கலக்கவும்.
- ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
- இறுதியில் பனங்கற்கண்டை சிறுசிறு துண்டுகளாக்கி பாத்திரத்தில் போட்டு, அனைத்துப் பொருட்களையும் நன்றாகக் கிளறி கொள்ளவும்.
- இப்போது பஞ்சாமிர்தம் சுவைப்பதற்கு தயார்.
- பஞ்சாமிர்தம் என்பது தமிழகத்தில் முருகக்கடவுளின் ஆலயங்களில், குறிப்பாக பழனியில் விற்கப்படும் ஒரு வகை பிரசாதமாகும். இதற்கான செய்முறையை, திருமதி. இரதி லோகநாதன் அவர்கள் எழுதிய ஆரோக்கியமே ஆனந்தம் எனும் நூலில் பார்த்தேன். சுவை மிகுந்த முழு இயற்கை உணவான இதனை உடனே வீட்டில் செய்தும் பார்த்தோம். நன்றாக இருந்தது.
- இதே செய்முறையை நாட்டு வாழைப்பழத்தை வைத்து செய்தாலும் நன்றாகவே இருந்தது.
- உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு பேரிச்சம் பழம், தேன் மற்றும் நாட்டுச்சர்க்கரை ஆகியவற்றின் அளவுகளை மாற்றிக் கொள்ளலாம்.
- பனங்கற்கண்டின் அளவு வாயில் எளிதாகக் கடித்து சாப்பிடும் அளவுக்கு இருக்குமாறுப் பார்த்துக் கொள்ளவும். அளவு மிகவும் பெரிதாக இருந்தாலும் இனிப்பில் தனியாக தெரியும். மிகவும் சிறியதாக இருந்தாலும், சாப்பிடும் முன்னர் கரைந்து விடும் வாய்ப்புள்ளது.
No comments :
Post a Comment