தேவையான
பொருட்கள்: (இரண்டு நபருக்கு)
- பொடியாக நறுக்கிய காய்கறி – 150 முதல் 200 கிராம் வரை
- சாம்பார் பொடி – 1/4 தேக்கரண்டி
- இந்துப்பு – சுவைக்கேற்ப
- நீர் – சிறிதளவு
- தேங்காய் துருவல் – 1 அல்லது 2 தேக்கரண்டி
- காயைக் கழுவி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- சமைக்கும் பாத்திரத்தில் காயைப் போட்டு, லேசாக தண்ணீர் தெளித்து வேக வைக்கவும். பாத்திரத்தை மூடி வைக்கவும்.
- மூன்று நிமிடங்களுக்கு பிறகு, சாம்பார் பொடி போட்டு கிளறி விட்டு, மீண்டும் சிறிது நேரம் வேக வைக்கவும்.
- காய் பாதி வெந்த பிறகு, அடுப்பை அணைக்கவும். பின் இந்துப்பை சேர்க்கவும்.
- சூடு சற்று குறைந்ததும் தேங்காய் துருவல் போட்டு கிளறவும்.
பாகற்காயையும்,
வெண்டைக்காயையும் கூட எண்ணை இல்லாமல் சமைக்கலாம்.
பாகற்காய்
சமைக்கும் முறை;
- முதலில் காயைக் கழுவி, பொடியாக நறுக்கவும்.
- அதில் சிறிது நீர் ஊற்றி, முக்கால் பதம் வரை வேக வைக்கவும்.
- பின்னர் நறுக்கிய தக்காளியை போட்டு வதக்கவும்.
- தக்காளி நன்கு வதங்கியதும், 1\4 தேக்கரண்டி மிளகாய் தூள் போடவும்.
- இரண்டு நிமிடங்கள் வதக்கிய பிறகு, அடுப்பை அணைக்கவும்.
- இதற்கிடையில் கால் குவளை தேங்காய் துருவலையும், 1\2 தேக்கரண்டி சீரகத்தையும், மிக்ஸியில் போட்டு, அரைத்து, தயாராக வைத்துக் கொள்ளவும்.
- பாகற்காய் சூடு சற்று தணிந்ததும், அரைத்த விழுது மற்றும் இந்துப்பு போட்டு நன்றாக கிளறவும்.
- ஒரு வாணலியில் நறுக்கிய வெண்டைக்காய் மற்றும் பெரிய வெங்காயத்தை போட்டு, சில நிமிடங்கள் வதக்கவும்.
- அதில் நறுக்கிய தக்காளியை போட்டு, வெண்டைக்காய் நன்கு வதங்கும் வரை வதக்கவும்.
- பின்னர் அதில் மிளகாய் பொடி போட்டு சில நிமிடங்கள் வதக்கிய பிறகு, அடுப்பை அணைத்து விடவும்.
- இறுதியில் இந்துப்பு சேர்த்து கிளறி விடவும்.
No comments :
Post a Comment