தேவையானப் பொருட்கள்:
செய்முறை:
- ஏதாவது ஒரு வகை (முருங்கைக் கீரை / மணத்தக்காளி / முளைக்கீரை அல்லது அமராந்த் / அரைக்கீரை) கீரை - 1 நபருக்குத் தேவையான அளவு
- முளை விட்ட பாசிப்பயறு - 1 டம்ளர்
- சீரகம் – 1/2 தேக்கரண்டி
- சிறு வெங்காயம் – 5 முதல் 10 துண்டுகள்
- வெள்ளைப்பூண்டு – 1 அல்லது 2 துண்டுகள்
- பச்சை மிளகாய் – 1
- இந்துப்பு – சிறிதளவு
- தேங்காய் துருவல் மற்றும் கொத்தமல்லி தழை – சிறிதளவு (விருப்பப்பட்டால் மட்டும்)
செய்முறை:
முளை விட்ட பாசிப்பயறுடன், சீரகம், வெள்ளைப்பூண்டு மற்றும் முழுப் பச்சை மிளகாய் (காம்பு அகற்றாமல் / நறுக்காமல்) போட்டு சிறிது நீர் ஊற்றி வேகவிடவும். பாதி வெந்த பிறகு, அதில் கழுவி வைத்த கீரையை போடவும். கீரை வெம்பி விடாமல் பார்த்துக் கொள்ளவும். ஓரளவு வெந்த பின் அடுப்பை அணைத்து உப்பு போடவும். சூடு சற்று குறைந்த பின் விருப்பப்பட்டால் தேங்காய் துருவல் மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்துக் கொள்ளலாம்.
No comments :
Post a Comment