தேவையானப்
பொருட்கள்: (இரண்டு நபருக்கு)
- ஏதாவது ஒரு வகை கீரை (நறுக்கியது) – 2 குவளை
- முளை விட்ட பாசிப்பயறு – 30 கிராம்
- சீரகம் – 1/2 தேக்கரண்டி
- சிறு வெங்காயம் – 5 முதல் 10 துண்டுகள்
- வெள்ளைப்பூண்டு – 1 அல்லது 2 துண்டுகள்
- பச்சை மிளகாய் – 1
- இந்துப்பு – சிறிதளவு
- தேங்காய் துருவல் மற்றும் கொத்தமல்லி தழை – சிறிதளவு (விருப்பப்பட்டால் மட்டும்)
- பாசிப்பயறை முதல் நாள மாலை முதல், குறைந்தது 5 மணிநேரம் நீரில் ஊற வைக்கவும்.
- இரவு உறங்கச் செல்லும் முன், ஊற வைத்த பயறை, ஓரிரண்டு முறை அலசி, அதிகப்படியான நீரை வடிகட்டிக் கொள்ளவும்.
- இதை மற்றொரு பாத்திரத்தில் போட்டு, லேசாக காற்று புகும்படி மூடி வைத்தால், காலையில் நன்றாக முளைத்திருக்கும்.
முளைகட்ட
வைப்பதற்கு, உங்களுக்கு பரிச்சயமான வேறு ஏதேனும் முறைகள் இருந்தால், அதையே பின்பற்றவும்.
செய்முறை:
- முளை விட்ட பாசிப்பயறுடன், சீரகம், வெள்ளைப்பூண்டு மற்றும் முழுப் பச்சை மிளகாய் (காம்பு அகற்றாமல் / நறுக்காமல்) போட்டு சிறிது நீர் ஊற்றி வேகவிடவும்.
- பாதி வெந்த பிறகு, அதில் கழுவி வைத்த கீரையை போடவும். கீரை வெம்பி விடாமல் பார்த்துக் கொள்ளவும்.
- கீரை ஓரளவு வெந்த பின் அடுப்பை அணைத்து உப்பு போடவும்.
- சூடு சற்று குறைந்த பின் விருப்பப்பட்டால் தேங்காய் துருவல் மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்துக் கொள்ளலாம்.
No comments :
Post a Comment