கொத்தமல்லி கீர் |
வல்லாரை கீர் |
பீட்ரூட் கீர் |
கறிவேப்பிலை கீர் |
பேரிச்சம் பழம் கீர் |
கேரட் கீர் |
கறிவேப்பிலை, மணத்தக்காளி, புதினா, கொத்தமல்லி, வல்லாரை, தூதுவளை, கரிசலாங்கண்ணி (மஞ்சள் / பச்சை) அல்லது கேரட் இவற்றில் ஏதாவது ஒன்றை கீர் தயாரிக்க பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்:
மேற்குறிப்பிட்ட வகைகளில் ஏதாவது ஒன்று - 1 பங்கு
தேங்காய் துருவல் - 1 பங்கு
நாட்டு சர்க்கரை - சுவைக்கேற்ப
செய்முறை:
கீர் செய்ய வேண்டிய கீரை அல்லது கேரட் 1 பங்குடன், தேங்காய்த் துருவல் 1 பங்கு சேர்த்து, இரண்டையும் மிக்ஸியில் போட்டு சாறு எடுக்கவும். இதனுடன் சுவைக்கேற்ப நாட்டு சர்க்கரை கலந்து குடிக்கவும்.
குறிப்பு:
1.கேரட் கீரில் விருப்பப்பட்டால் தேங்காய்த் துருவல் மற்றும் ஏலக்காய் பொடி சேர்க்கலாம். இல்லையெனில் வெறும் கேரட் சாறு மட்டும் எடுத்து பருகலாம். அதுவே சுவையாக இருக்கும்.
2.பேரிச்சம் பழம் கீர் செய்யும் போது பழத்தை குறைந்தது 5 மணி நேரம் ஊற வைத்து பிழிந்து சாறாக்கி குடிக்கலாம். முடி கொட்டும் பிரச்சினை உள்ளவர்கள் இந்த பழச்சாறில் சில துளிகள் எலுமிச்சை பழம் பிழிந்து தேன் சேர்த்து குடித்தால் சரியாகி விடும்.
3.வல்லாரை கீர் வாரம் 1 அல்லது 2 முறை மட்டும் வெறும் வயிற்றில் (காலை) குடித்தால் போதும்.
No comments :
Post a Comment