ஒரு அகலமான பாத்திரத்தில் இரு மணிக்கட்டுகள் மூழ்குமளவு வெந்நீர் ஊற்றவும். இதே போல் மற்றொரு அகலமான பாத்திரத்தில் இரு கணுக்கால்களும் மூழ்குமளவு வெந்நீர் ஊற்றிக் கொள்ளவும். நீரின் வெப்பம் கைகள் தாங்கும் அளவு இருக்க வேண்டும். குளியல் எடுக்கும் நபர் பருத்தியிலான எளிய ஆடை உடுத்தி இருக்க வேண்டும். தலைக்கு தண்ணீரில் நனைத்துப் பிழிந்த துவாலையை, தலைப்பாகையை போல் சுற்றிக் கொள்ளவும். பின்பு ஒரு நாற்காலியில் வசதியாக அமர்ந்து கொள்ளவும். இரு மணிக்கட்டுகளையும் தமக்கு முன்னால் சற்று உயரமாக உள்ள மேசையிலிருக்கும் அகலமான நீருள்ள பாத்திரத்தில் வைக்கவும். அதே போல் மேசைக்குக் கீழே மற்றொரு நீருள்ள பாத்திரத்தை வைத்து அதில் இரண்டு கணுக்கால்களையும் மூழ்கச் செய்யவும்.
இந்தப் பயிற்சி முடியும் வரை நீரின் வெப்பம் ஒரே சீராக இருக்க வேண்டும். நீரின் வெப்பம் சற்றுக் குறையும் பொழுதெல்லாம், ஓரிரண்டு குவளை நீரை முகர்ந்து கீழே ஊற்றி விட்டு மீண்டும் வெந்நீர் ஊற்றி வெப்பத்தை சமன் செய்ய வேண்டும். எனவே பயிற்சியின் பொழுது ஒரு உதவியாளர் அவசியம் இருக்க வேண்டும்.
பயிற்சியின் போது உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் முழுவதும் அதிக அளவு வியர்வை மூலம் வெளியேறும். எனவே பயிற்சியை முடித்த பின் வியர்வை நன்றாக காய்ந்த பின்னர் தண்ணீரில் தலைக்கு குளிக்கவும்.
No comments :
Post a Comment