கவுணி அரிசி இனிப்பு கொழுக்கட்டை |
தேவையான பொருட்கள்:
- கவுணி அரிசி மாவு – 1 குவளை (200 கிராம்)
- மண்டை வெல்லம் - 1 குவளை (200 கிராம்)
- தண்ணீர் – 3/4 குவளை
- தேங்காய் – 1/2 குவளை (பொடியாக நறுக்கியது)
- ஏலக்காய் பொடி – 1/2 தேக்கரண்டி
- எள் – 2 தேக்கரண்டி
செய்முறை:
- ஒரு அகலமான பாத்திரத்தில் கவுணி அரிசி மாவு, தேங்காய் துண்டுகள், எள், ஏலக்காய் பொடி போட்டு அனைத்தையும் ஒரு முறை விரலால் கலக்கவும்.
- மற்றொரு பாத்திரத்தில் மண்டை வெல்லத்தை பொடித்துப் போட்டு, தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் கரைய விடவும். பின்னர் அடுப்பில் வைத்து 3 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
- சூடான வெல்லப்பாகை, மாவு இருக்கும் பாத்திரத்தில் நேரடியாக வடிகட்டவும். மரக் கரண்டி கொண்டு மாவை நன்றாக கிளறி அனைத்துப் பொருட்களும் ஒன்றாக சேருமாறு கட்டியாக பிசைந்து கொள்ளவும்.
- சிறிது மாவை கிள்ளி எடுத்து உள்ளங்கையில் உருட்டி, விரல்களால் லேசாக அழுத்தி கொழுக்கட்டை பிடிக்கவும். மாவு தீரும் வரை இதேபோல் செய்து முடிக்கவும்.
- கொழுக்கட்டைகளை இட்லி தட்டில் வைத்து 20 நிமிடங்கள் வேக வைக்கவும். இட்லி பாத்திரத்தில் நீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன், தீயை குறைத்துக் கொள்ளவும்.
- அடுப்பை அணைத்து 2 அல்லது 3 நிமிடங்களுக்குப் பிறகு மூடியை திறந்து, கொழுக்கட்டையை பரிமாறவும்.
- கம்பு, ராகி, சோளம், வரகு, சாமை, குதிரைவாலி மற்றும் திணை போன்ற சிறுதானிய மாவுகளிலும், மாப்பிள்ளை சம்பா போன்ற பாரம்பரிய அரிசி மாவுகளிலும் கொழுக்கட்டை செய்யலாம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சுவையுடன் இருக்கும்.
- வெல்லப்பாகு சூடாக இருக்கும் பொழுதே மாவில் ஊற்ற வேண்டும். இது மிக முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டிய குறிப்பு. பாகு சூடாக இல்லையெனில் கொழுக்கட்டை சரியான பதத்திற்கு வராது.
- ஒவ்வொரு சிறுதானியம் அல்லது அரிசி வகைக்கும் வேகும் நேரம் வித்தியாசப்படும். எனவே முதல் 10 நிமிடம் கழித்து கொழுக்கட்டையின் பதத்தை சரி பார்த்து அடுப்பை அணைக்கவும்.
கம்பு இனிப்பு கொழுக்கட்டை |
சோள இனிப்பு கொழுக்கட்டை |
ராகி இனிப்பு கொழுக்கட்டை |
No comments :
Post a Comment