தேவையான பொருட்கள்:
- கவுணி அரிசி – 1/2 குவளை
- தண்ணீர் – தேவையான அளவு
- பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் - 1/2 குவளை
- தேங்காய் பால் – 1 குவளை
- ஏலக்காய் பொடி – 1/2 தேக்கரண்டி
- முந்திரிப் பருப்பு – 8 எண்ணிக்கை
செய்முறை:
- கவுணி அரிசியை குறைந்தது ஆறு மணிநேரம் ஊற வைக்கவும். அரிசியைக் கழுவி குக்கரில் போட்டு 3 குவளை நீர் ஊற்றி 15 நிமிடங்கள் வேக வைக்கவும். பின் அடுப்பை அணைக்கவும். சாதம் ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு சற்று கரகரப்பாக இருக்கும் படி அரைத்துக் கொள்ளவும். நீர் அதிகம் ஊற்றத் தேவையில்லை.
- இதற்கிடையில் தேங்காய் பால் எடுத்து தயாராக வைக்கவும். அதேபோல் முந்திரிப் பருப்பை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து வைக்கவும்.
- இப்பொழுது அரைத்த சாதத்தை மீண்டும் குக்கருக்கு மாற்றி சிறிதளவு தண்ணீர் ஊற்றி பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் சேர்த்து நன்றாக கரையும் வரை கலக்கவும். அடுப்பை அணைத்த பின், தேங்காய் பால், வறுத்த முந்திரிப் பருப்பு மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கலக்கி, சூடாக பருகவும்.
- நான் இந்த செய்முறையை 'ஈஷா ருசி' என்கின்ற புத்தகத்தில் கற்றேன்.
- தேங்காய் பாலை அடுப்பை அணைத்த பிறகு தான் சேர்க்க வேண்டும்.
No comments :
Post a Comment