தேவையான பொருட்கள்:
- நிலக்கடலை – 1 குவளை
- மண்டை வெல்லம் – 1/2 குவளை
- ஏலக்காய் பொடி – 1/2 தேக்கரண்டி
செய்முறை:
- வாணலியில் நிலக்கடலையை 10 முதல் 15 நிமிடங்கள் வரை நன்றாக வறுக்கவும். கடலை வெடிக்க ஆரம்பித்த பிறகு அடுப்பை அணைத்து நன்றாக ஆற விடவும். பிறகு மிக்ஸியில் போட்டு பொடி செய்யவும். தோலை நீக்க வேண்டியதில்லை.
- மண்டை வெல்லத்தை உதிர்த்துக் கொள்ளவும். வெல்லம் மற்றும் ஏலக்காய் பொடியை நிலக்கடலை பொடியுடன் சேர்த்து மிக்ஸியில் ஒரு சில வினாடிகள் அரைக்கவும். இப்படி செய்வதால் அனைத்து பொருட்களும் ஒன்றாக கலந்து விடும்.
- இந்தக் கலவையை ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும். கலவையிலிருந்து சிறிய அளவு மட்டும் கையில் எடுத்து உள்ளங்கையில் உருட்டி விரல்களால் நன்கு அழுத்தி உருண்டை பிடிக்கவும். உருண்டைகளை காற்று புகாத பாத்திரத்தில் வைத்து சாப்பிடவும்.
குறிப்பு:
- இந்த செய்முறையை வலைதளத்தில் கற்றேன். இது செய்வதற்கு மிக எளிமையான மற்றும் சத்துமிகுந்த ஒரு தின்பண்டம்.
- நிலக்கடலை எண்ணைத் தன்மை மிகுந்ததாக இருப்பதால், உருண்டை பிடிக்க கூடுதலாக நெய் அல்லது வேறு எந்த எண்ணையும் சேர்க்கத் தேவையில்லை.
No comments :
Post a Comment