- குதிரைவாலி அரிசி – 1 குவளை (150 கிராம்)
- தண்ணீர் – 2 1/4 குவளை
- நல்லெண்ணை – 2 தேக்கரண்டி
- கிராம்பு – 2 எண்ணிக்கை
- கடலைப் பருப்பு – 1 தேக்கரண்டி
- பெரிய வெங்காயம் – 1 (நீளமாக நறுக்கியது)
- மிளகு – 8 எண்ணிக்கை
- கறிவேப்பிலை – 2 ஈர்க்கு
- கொத்தமல்லி தழை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
- தேங்காய் துருவல் – 1 குவளை (150 கிராம்)
- இந்துப்பு – சுவைக்கேற்ப
செய்முறை:
- சமைப்பதற்கு முன்னர் குதிரைவாலி அரிசியை 30 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும். குக்கரில்அரிசியை போட்டு நீர் ஊற்றி, அதில் சிறிது உப்பு மற்றும் சில துளிகள் எண்ணை சேர்த்து வேக வைக்கவும். முதல் விசில் வந்த பிறகு, தீயை குறைத்து 8 நிமிடங்கள் கழித்து, அடுப்பை அணைக்கவும். குக்கர் ஆவி போன பிறகு, 10 நிமிடங்கள் கழித்து திறக்கவும். சாதத்தை ஒரு அகலமான தட்டில் பரப்பி சில நிமிடங்கள் ஆற விடவும். பிறகு மீண்டும் குக்கரில் போட்டு மூடி வைக்கவும்.
- இதற்கிடையில் வாணலியில் நல்லெண்ணையை ஊற்றி, அது சூடானதும் கிராம்பை போடவும். பிறகு கடலைப் பருப்பை போட்டு, அது பொன்னிறமாகும் வரை வதக்கவும். இப்போது வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து வதக்கவும். சற்று வதங்கிய பின் மிளகைப் பொடித்து வாணலியில் போடவும். வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு அடுப்பை அணைக்கவும். இப்பொழுது தேங்காய் துருவல் மற்றும் கொத்தமல்லி தழையை சேர்த்து கிளறவும். பின்னர் வேகவைத்த சாதத்தை இந்தக் கலவையில் சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கிளறி விடவும். சுவைக்கேற்ப இந்துப்பு சேர்க்கவும்.
குறிப்பு:
- இதே செய்முறையில் குதிரைவாலிக்கு பதிலாக, வரகு, திணை மற்றும் சாமை போன்ற சிறுதானியங்களையும் பயன்படுத்தலாம்.
No comments :
Post a Comment