- வறுத்து, அரைத்த கோதுமை மாவு – 1 குவளை (150 கிராம்)
- தண்ணீர் – 3/4 குவளை
- இந்துப்பு – 1 சிட்டிகை
முழு கோதுமை 1
கிலோவை கல், தூசி இல்லாமல் சுத்தம் செய்து கொள்ளவும். வாணலியில் ஒன்று அல்லது இரண்டு
குவளைகளாக கோதுமையை போட்டு வறுக்கவும். கோதுமையின் நிறம் பொன்னிறமாக வேண்டும். மேலும்
சற்று நேரத்தில் கோதுமை வெடிக்க ஆரம்பிக்கும். இதுதான் சரியான பதம். இப்பொழுது வறுத்த
கோதுமையை அகன்ற தட்டில் கொட்டி ஆறவிடவும். பிறகு மாவு மில்லில் அரைத்து வந்து சலித்து,
காற்று புகாதவாறு பாத்திரத்தில் சேமித்துக் கொள்ளவும். இந்த மாவை இடியாப்பம் மற்றும்
இனிப்புக் கொழுக்கட்டை செய்யவும் பயன்படுத்தலாம்.
இடியாப்பம் செய்முறை:
- ஒரு அகன்ற பாத்திரத்தில், தேவையான அளவு மாவுடன் இந்துப்பு போட்டு விரல்களால் கலக்கவும். அதில் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ளவும். மாவு மென்மையாக இருக்க வேண்டும். ஆனால் கையில் ஒட்டக் கூடாது.
- இந்தப் பதத்திற்கு வந்த பிறகு, மாவை இடியாப்ப அச்சில் வைத்து, இட்லி தட்டின் மேல் பிழியவும். பிறகு அந்தத் தட்டை இட்லி பாத்திரத்தில் வைத்து 5 நிமிடம் வரை வேக வைக்கவும். இடியாப்பம் வெந்தவுடன் அதனை சூடாக வைத்திருக்கும் பாத்திரத்திற்கு (hot pack) மாற்றவும்.
- சாப்பிடும் பொழுது நாட்டு சர்க்கரை, தேங்காய்த் துருவல், சில துளிகள் நல்லெண்ணைய் (விருப்பப்பட்டால் மட்டும்) ஊற்றி, நன்றாகப் பிசைந்து சாப்பிடவும்.
குறிப்பு:
- நான் இந்த செய்முறையை எனது தாயாரிடமிருந்து கற்றுக்கொண்டேன். மாவை முதலில் தயார் செய்து வைத்து விட்டால், இடியாப்பத்தை மிகவும் எளிதாக, விரைவான முறையில் செய்யலாம்.
- வெறும் இடியாப்பம் செய்து அதில் இனிப்பைக் கலந்து சாப்பிடுவதற்கு பதில், கோதுமை மாவில் வெல்லப்பாவை ஊற்றி, ஏலக்காய்ப் பொடி சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். இந்த மாவை அச்சில் வைத்துப் பிழிந்து, இனிப்பு இடியாப்பமாக செய்து சாப்பிடலாம்.
- இதே இனிப்பு மாவில் சிறிதாக நறுக்கிய தேங்காய் துண்டுகளைக் கலந்து, கொழுக்கட்டை செய்தும் சாப்பிடலாம்.
No comments :
Post a Comment