சோளம் சாத்வீக இட்லி |
மாவு தயாரிப்பதற்கு:
- சோளம் – 1 குவளை (150 கிராம்)
- சோள அரிசி – 1/4 குவளை (50 கிராம்)
- வெண்டைக்காய் – 1 குவளை (150 கிராம்)
- வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
மாவுடன் கலப்பதற்கு:
- முளைவிட்ட பாசிப்பயறு அல்லது நிலக்கடலை – 3 தேக்கரண்டி
- கேரட் துருவல் – 3 தேக்கரண்டி
- முட்டைக்கோஸ் நறுக்கியது - 3 தேக்கரண்டி
- இந்துப்பு – சுவைக்கேற்ப
செய்முறை:
- முழு சோளம் மற்றும் வெந்தயம் இவை இரண்டையும் முதல் நாள் இரவே (குறைந்தது 6 மணிநேரம்) ஊறவைக்கவும்.
- மறுநாள் காலையில் ஊறிய சோளத்தை ஓரிரு முறை அலசிக் களைந்து விட்டு, ஆட்டுக்கல்லில் (கிரைண்டரில்) சிறிது நீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.
- இதற்கிடையில் வெண்டைக்காயை, சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் விழுதாக அரைத்து, அதனையும் ஆட்டுக்கல்லில் மாவுடன் சேர்த்து ஒன்றாக அரைக்கவும். மாவை ஒரு பாத்திரத்தில் சேகரித்துக் கொள்ளவும். இதில் உப்பு சேர்க்க வேண்டாம்.
- சோள அரிசியை தனியாக காய்ந்த மிக்ஸியில் போட்டு சற்று கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- பொடித்த வைத்த சோள அரிசி மாவை, ஏற்கனவே அரைத்து வைத்துள்ள இட்லி மாவுடன் நன்றாகக் கலந்து மூடி வைக்கவும்.
- 4 மணி நேரம் கழித்து இந்த மாவுடன், முளைவிட்ட பாசிப்பயறு/ நிலக்கடலை, துருவிய கேரட், நறுக்கிய முட்டைக்கோஸ், இந்துப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கொள்ளவும். இட்லி ஊற்றும் பதத்திற்கு ஏற்றவாறு, தேவைப்பட்டால் தண்ணீர் கலக்கவும்.
- இட்லி பாத்திரத்தில் வேக வைத்து, சாப்பிடவும்.
குறிப்பு:
- இயற்கை வாழ்வியல் முகாமில் கற்றுக் கொண்ட இந்த செய்முறையை, நான் சற்று மாற்றி செய்திருக்கின்றேன்.
- சோள அரிசி பொதுவாக அனைத்து இயற்கை அங்காடிகளிலும் கிடைக்கும். ஒருவேளை உங்கள் ஊரில் அது கிடைக்கவில்லை எனில், சோள அரிசிக்கு பதில் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்தவும்.
- கேரட், முட்டைக்கோஸ் போன்ற காய்களுக்கு பதிலாக, சௌசௌ மற்றும் பீன்ஸ் அல்லது உங்களுக்கு விருப்பமான, வேறு ஏதாவது இரண்டு வகையான காய்கள் உபயோகிக்கலாம்.
- வெண்டைக்காய்க்கு பதிலாக வெண்பூசணிக்காயைப் பயன்படுத்திச் செய்த சாத்வீக இட்லி செய்முறையை இங்குக் காணலாம்.
- அதுபோலவே, ராகியில் செய்த சாத்வீக இட்லி செய்முறையை இங்குக் காணலாம்.
No comments :
Post a Comment