முளைகட்டியப் பாசிப்பயறு பெசரட்டு |
- பாசிப்பயறு – 1 குவளை (100 கிராம்)
- இஞ்சி – 1/2 இன்ச் துண்டு
- சீரகம் – 1/2 தேக்கரண்டி
- மிளகு - 1/2 தேக்கரண்டி
- பெரிய வெங்காயம் – 1
- இந்துப்பு - சுவைக்கேற்ப
- பெசரட்டு செய்வதற்கு முதல்நாள் மதியம் பாசிப்பயறை குறைந்தது 6 மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். இரவு பயறை ஓரிரு முறை தண்ணீரில் அலசி கழுவி விட்டு ஒரு பருத்தித் துணியில் போட்டு சுற்றி வைக்கவும். மறுநாள் காலையில் அது முளைத்து இருக்கும். முளைகட்டிய பாசிப்பயறை மீண்டும் ஓரிரு முறை தண்ணீரில் கழுவி எடுத்து மிக்ஸியில் போடவும். அதனுடன் இஞ்சி சீரகம், மிளகு மற்றும் பெரிய வெங்காயத் துண்டுகளையும் போடவும். அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும். மாவை மற்றொருப் பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும். மாவில் சுவைக்கேற்ப இந்துப்பை சேர்த்து நன்கு கலக்கவும்.
- தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நன்கு சூடானதும், மாவை தோசை போல் ஊற்றி, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். உங்களுக்கு விருப்பமான ஏதாவது ஒரு வகை சட்னி அல்லது காய்கறி குருமாவுடன் சாப்பிடவும்.
- நான் பெசரட்டு செய்முறையை வலைத்தளத்தில் இருந்து கற்றுக் கொண்டேன். பெசரட்டு என்பது ஆந்திர மாநிலத்தில் முழுக்க முழுக்க பாசிப்பயறை ஊறவைத்து அரைத்து செய்யப்படும் தோசையாகும். இதே செய்முறையில் வெறும் பயறாக அல்லாமல் அதை முளைகட்ட வைத்து தானிய நிலைக்கு உயர்த்தி தோசை செய்திருக்கின்றேன்.
- பெசரட்டு மாவைப் புளிக்க வைக்கக் கூடாது. எனவே தோசை ஊற்றுவதற்கு சிறிது நேரம் முன்பாக அரைத்து உடனடியாக தோசை வார்த்து விடவும்.
- பாசிப்பயறைப் போலவே மற்ற பயறு வகைகளை முளைகட்ட வைத்தும் தோசை இதே முறையில் தோசை ஊற்றலாம். அல்லது முளைகட்டியப் பயறுடன் ஏதாவது ஒரு வகை சிறுதானியத்தை சேர்த்து அரைத்தும் பெசரட்டு செய்யலாம்.
No comments :
Post a Comment